
தடுப்பூசியின் இரண்டாவது மருந்தை செலுத்துவது தொடர்பில் அவதானம்..!
தடுப்பூசியின் இரண்டாவது மருந்தை, 8 முதல் 12 வாரங்களுக்கு இடையில் செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொவிஷீல்ட் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது மருந்தை நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும் என முன்னதாக அறியப்படுத்தப்பட்டது.
எனினும், தற்போதைய விஞ்ஞான ரீதியான தகவல்களின் அடிப்படையில், தாமதிக்கும் அளவிற்கு நோய் எதிர்ப்பு செயல்திறன் சிறந்ததாகும் என்று கூறப்படுகிறது.
இதேநேரம், 8 முதல் 12 வாரங்களுக்கு இடையில் இரண்டாவது மருந்தை செலுத்த முடியும் என உலக சுகாதார ஸ்தாபனமும் பரிந்துரைத்துள்ளது.
எனவே, இலங்கையிலும் 12 வாரங்களில் இரண்டாவது மருந்தை செலுத்துவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்படுகிறது.
பெரும்பாலும், 12 வாரங்களில் இரண்டாவது மருந்தை வழங்குமாறே நிபுணர்கள் பரிந்துரைப்பதாக இரா ஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.