ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய அரசியல் உயர்பீட கூட்டம் ஆரம்பம்.!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய அரசியல் உயர்பீட கூட்டம் ஆரம்பம்.!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய அரசியல் உயர்பீட கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இந்த கூட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த கூட்டத்தில் 20 ஆம் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படுகின்றது.

20 ஆம் திருத்த சட்டம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம்பெற்ற போது முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்கள்  ஆதரவளித்தனர்.

எனினும், முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தி 20 ஆம் திருத்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது