போதி மரத்தினை பாதுகாக்கும் நிகழ்வு! சிறு வயதி வாழ்க்கையினை நினைவுபடுத்தி பிரதமர்

போதி மரத்தினை பாதுகாக்கும் நிகழ்வு! சிறு வயதி வாழ்க்கையினை நினைவுபடுத்தி பிரதமர்

இலங்கை புத்த சாசனத்தின் சிறந்த ஆன்மீக வளமாக விளங்கும் இந்த போதி மரத்தின் புதிதாக வெளிவந்த தளிர்கள் மற்றும் வேர்களின் படிப்படியான வளர்ச்சிக்கு போதுமான இடத்தை அனுமதிக்க பாதுகாப்பு சுவரை விரிவுபடுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில போதி மரத்தை பாதுகாக்கும் புண்ணிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் காலத்திலிருந்து பக்தர்களால் வழிபடப்படும் பெல்லன்வில ரஜமஹா விகாரையில் காணப்படும் போதி மரம், அனுராதபுரத்தில் உள்ள ஜயஸ்ரீ மகா போதி மரத்திலிருந்து தோன்றிய போதி மரம் என்பதை நாம் அறிவோம்.

இலங்கை புத்த சாசனத்தின் சிறந்த ஆன்மீக வளமாக விளங்கும் இந்த போதி மரத்தின் புதிதாக வெளிவந்த தளிர்கள் மற்றும் வேர்களின் படிப்படியான வளர்ச்சிக்கு போதுமான இடத்தை அனுமதிக்க பாதுகாப்பு சுவரை விரிவுபடுத்த வேண்டும்.

அதற்கு உகந்த வகையில் பண்டைய போதி சுவர்கள் மற்றும் போதி மரங்களின் பாதுகாப்பு குறித்து நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் விரிவாக்கம் மற்றும் கட்டுமானம் செய்யப்படுவது அவசியம். அதன் மூலம் போதி மரத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சிறு வயதிலிருந்தே ஒரு பரீட்சை நெருங்கும்போது எமக்கு பெல்லன்வில ரஜமஹா விகாரையே நினைவிற்குவரும். இது நாம் அனைவரும் பழகிய ஒரு கொள்கை என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒரு பரீட்சை நெருங்கும் போது, நாம் அனைவரும் எங்கிருந்தாலும் பெல்லன்விலவிற்கு வருகிறோம்.

பெல்லன்விலவிற்கு வருகைதந்து போதி மர வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்தே நாம் பரீட்சைக்கு செல்வோம். அவ்வாறானதொரு தொடர்பு நமக்கு இந்த பெல்லன்வில விகாரையுடன் காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் மஹாசங்கத்தினர் மற்றும் அமைச்சர்களான காமினி லொகுகே, உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேதாஸ ராஜபக்க்ஷ, ஜகத் குமார, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.