கொரோனா தொற்று தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர்!

கொரோனா தொற்று தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர்!

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குமாறு பொது மக்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பொது மக்களின் உதவியின்றி இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார் இன்று இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பயணங்களை மட்டுப்படுத்துதல், அதிகளவிலான மக்கள் இருக்கும் இடங்களைத் தவிர்த்தல், முக்கவசம் அணிதல் மற்றும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர், வைரஸை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் பி.சி.ஆர். சோதனை முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் சிறிய தாமதங்களும் இந்த அதிகரிப்புக்கு ஒரு காரணம் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.