பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் தாமதம் - கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தடை..!

பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் தாமதம் - கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தடை..!

பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமடைவதன் காரணமாக, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார அதிகாரிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்