
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக 110 பில்லியன் ரூபா ஒதுக்கீடு..!
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரையில் 110 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளாந்தம் பி.சீ.ஆர் நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் என்ற விதத்திலும் அமைச்சு என்ற ரீதியிலும் இதற்காக பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
திறைச்சேரியின் ஊடாக இதற்கான நிதி எமக்கு வழங்கப்படுகின்றது.
இந்த தொகையுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு குறைவான தொகையே செலவாகும்.
தற்போது உலகளாவிய ரீதியில் தயாரிக்கப்படுகின்ற தடுப்பூசிகள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளதாகவும் இலங்கைக்கும் அவற்றை கொள்வனவு செய்வதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ தெரிவித்துள்ளார்