அப்புத்தளையில் நபரொருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...!

அப்புத்தளையில் நபரொருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...!

அப்புத்தளை - சேவுட் தோட்டத்தில் 23 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் கொழும்பு - கிருலப்பனையில் உள்ள வாகன சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய நிலையில், கடந்த 3ஆம் திகதி தமது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி, இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபருடன் தொடர்பை பேணிய இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர், 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்