பிரதமரினால் திறந்து வைக்கப்பட்ட புதிய மீன் உற்பத்தி தொழிற்சாலை..!!

பிரதமரினால் திறந்து வைக்கப்பட்ட புதிய மீன் உற்பத்தி தொழிற்சாலை..!!

சிலோன் கெட்ச் தனியார் நிறுவனத்தின் புதிய மீன் உற்பத்தி தொழிற்சாலை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் தங்கொட்டுவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், கனடா, சீனா, தாய்லாந்து மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட கடல் உணவை ஏற்றுமதி செய்யும் இலங்கையின் முன்னணி ஏற்றுமதி நிறுவனம் இதுவாகும்.

அந்த நிறுவனத்தின் வருடாந்த ஏற்றுமதி வருவாய் 12 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

இந்த நிலையில், புதிய தொழிற்சாலை திறக்கப்பட்டதன் ஊடாக 15 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது