
சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்த 50 பேருக்கு கொரோனா
அண்மையில் கொழும்பில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிவில் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 50 பேர் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பின்னர், அம்பாறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையில், சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்த கதிர்காம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து அதிகாரியும் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்..
நிகழ்வுக்கு முன்பு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
ஆனால் நிகழ்வுக்கு பிறகு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் கோவிட் தொற்று இருப்பது தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.