பேஸ்புக் நண்பனை நம்பிச் சென்றவருக்கு நடந்த விபரீதம்

பேஸ்புக் நண்பனை நம்பிச் சென்றவருக்கு நடந்த விபரீதம்

பலாங்​கொடையில் களியாட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நபர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் கடத்திச் செல்லப்பட்ட நபர் அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

37 வயதான பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த நபருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இவர் கை, கால் கட்டப்பட்ட நிலையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பேஸ்புக் நண்பர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், அவரின் அழைப்புக்கிணங்க நேற்று அதிகாலை 3 மணியளவில் பலாங்கொடை நகரிலிருந்து களியாட்ட நிகழ்வொன்றுக்குச் செல்வதாக கூறி காரில் சென்றுள்ளனர்.

இதன்போது வாகனத்தில் இருந்த இருவர் அவரை பயமுறுத்தி கை கால்களை கட்டி கடத்திச் சென்றுள்ளனர்.

இடையில் கரவனெல்ல பிரதேசத்தில் தேநீர் அருந்துவதற்காக இவரது கைகால் கட்டுக்களை அவிழ்த்து விட்டபோது மலசலகூடத்திற்கு செல்வதாக கூறி இவர் கடத்தல் காரர்களிடமிருந்து தப்பி, ஆற்றில் நீச்சலடித்து தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது