தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து பிரிவுகளும் உடனடியாக மூடப்பட்டன

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து பிரிவுகளும் உடனடியாக மூடப்பட்டன

தேர்தல் ஆணைக்குழுவில் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் ஆணைக்குழுவின் அனைத்துப் பிரிவுகளும் மூடப்பட்டன.

எனினும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகுமென ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கணக்காய்வுப் பிரிவில் பணி புரியும் ஒருவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஆணைக்குழுவின் ஏனைய ஊழியர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அந்த நிலையில் நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்துப் பிரிவுகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.

அனைத்து பிரிவுகளிலும் வைரஸ் தொற்று நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க எதிர்வரும் 15 ஆம் திகதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.