கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்த விடயம்

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்த விடயம்

கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டிருந்த சுமார் 4500 பேரின் விபரங்கள் விடுபட்டிருப்பதாக இரசாயன பகுப்பாய்வு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளுக்கு அமைய, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக கொவிட் நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 728 ஆகும்.

நேற்று வரையில் இரண்டாம் அலையினால் கொவிட் நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 174 என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அப்படியானால் 4554 பேருக்கு என்னானது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் மேலும் 567 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின், நாளாந்த கொவிட்-19 நிலவர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 211 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நாட்டில் இதுவரையில் 72 ஆயிரத்து 174 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 5 ஆயிரத்து 588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்