
வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13,14ஆம் திகதிகளில்..!!
மேட் இன் ஸ்ரீலங்கா வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச இதனை கூறியுள்ளார்.
உள்நாட்டவர்கள் புதிய நம்பிக்கை, உத்வேகத்துடன் உற்பத்திகளை மேற்கொள்ளும் விடயத்தில் அவதானம் செத்தியுள்ளனர்.
அவர்களிடையே ஏற்பட்டுள்ள ஆர்வத்தை மேலும் பலப்படுத்தவதற்கான ஒரு காரணியாக மேட் இன் ஸ்ரீலங்கா வர்த்தக கண்காட்சி அமையும்.
எனவே, இந்த மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதி இலங்கை மன்றக்கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீதியில் வர்த்தக கண்காட்சிக்கு வருமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.