நாட்டின் உள்ளக நுகர்வு கணிசமாக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிப்பு...!

நாட்டின் உள்ளக நுகர்வு கணிசமாக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிப்பு...!

கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் உள்ளக நுகர்வு கணிசமாக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியில் உள்ளக நுகர்வு 4.1 சதவீதத்தினால் அதிகரித்திருந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டில் ஆண்டில் அது 5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொவிட்-19 உலகப் பரவல் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இதற்கு பிரதான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் மற்றும் உணவுக் கொள்வனவுகள், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்பனவற்றினால் உள்நாட்டு நுகர்வு வீழ்ச்சியடைந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், பொதுமக்கள் புதிய வழமைக்கு இசைவாக்கமடையும் போது, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு நுகர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது