பொகவந்தலாவையில் ஐவர் இரவோடு இரவாக கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

பொகவந்தலாவையில் ஐவர் இரவோடு இரவாக கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்தியபிரிவில் இனங்காணப்பட்ட 05 கொரோனா தொற்றாளர்களும் நேற்று இரவு 09.30 மணியளவில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொதுச் சுகாதார பரிசோதகர் அதிகாரிகள் இதை தெரிவித்துள்ளனர்.

இதில் தொற்றுக்குள்ளான இரண்டு ஆண்கள் பொகவந்தலாவ மோரா தேசிய பெருந்தோட்ட நிலைய கொரோனா சிகிச்சை நிலையத்திற்கும்,

ஏனைய மூன்று பெண்களும் வலப்பனை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு சுகாதார முறைமையோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவர்களுடன் தொடர்பினை பேணிவந்த 62பேருக்கு நாளைய தினம் பி.சீ.ஆர்பரீசோதனை மேற்கொள்ளப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது