ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

இன்று (10) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதை தெரிவித்தார்.

இன்று இரவு 12.00 மணிக்கு நாம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றுக்குச் செல்ல தீர்மானித்துள்ளோம்.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தில் இவ்வாறான காலியிடங்கள் காணப்பட்டால் இன்னும் இரண்டு மாதங்களில் இது கவிழ்ந்துவிடும்´ என்றார்.