
கட்டுப்பாடுகளை மீறி நடந்த விருந்துபசாரம்! 14 பேருக்கு பிடியாணை
மட்டக்களப்பு - கல்லடியில் உள்ள ஒரு விடுதியில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட நபர்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
மேலும் இதில் கலந்து கொண்டவர்களில் 25 பேருக்கு தலா ரூ. 4,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், தப்பி ஓடிய 14 நபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார ஆய்வாளரின் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி டிசம்பர் 15 ஆம் திகதி இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது.
இதன் காரணமாக அதில் கலந்துகொண்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது