கல்வி அமைச்சிடம் இருந்து ஓர் விசேட அறிவித்தல்..!

கல்வி அமைச்சிடம் இருந்து ஓர் விசேட அறிவித்தல்..!

2020 ஆம் ஆண்டு, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள், முன்னர் இடம்பெற்றதைப் போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துமூலமான பரீட்சைகளின் பின்னர் செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

செயன்முறை பரீட்சைகள் நடைபெறும் இடங்கள், காலம் என்பன அடங்கிய பரீட்சை அனுமதிப்பத்திரம், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்