
பிரதமரிடம் இருந்து மத்திய வங்கிக்கான ஓர் விசேட அறிவித்தல்..!!
கடன் மற்றும் குத்தகை தொகைகளை முழுமையாக ஒரேதடவையில் செலுத்தும் போது, கூடுதல் கட்டணத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு பிரதமர் மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
கடன் மற்றும் குத்தகை தொகைகளை முழுமையாக ஒரேதடவையில் செலுத்தும் போதும் ஒரு தொகை கூடுதல் கட்டணம் அறவிடப்படுகின்றதாக பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் பிரதமர் கூறியுள்ளார்