
நாடாளுமன்றுக்கு எப்போது வருவார் ரஞ்சன்?-வெளியானது தகவல்
நீதிமன்றால் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க எப்போது நாடாளுமன்றம் வருவார் என்ற தகவல் இன்றையதினம் வெளிவந்தது.
இதன்படி நீதிமன்றத்தால் தீர்ப்பொன்று வழங்கப்படும் வரை, ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்கு அழைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
நீதிமன்றை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் தற்போது ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025