தொடருந்து நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்படவுள்ள 48 மணி நேர போராட்டம்..!

தொடருந்து நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்படவுள்ள 48 மணி நேர போராட்டம்..!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து நிலையங்களின் அதிபர்கள் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

தொடருந்து திணைக்களத்தில் நிலவுகின்ற தொழில் வெற்றிடங்களை நிரப்புதல், ஆட்சேர்ப்பு முறைமையில் மாற்றம் ஏற்படுத்தல், தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான தொடர்பாடலை மேம்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் வழங்கப்படாதபட்சத்தில் இந்த போராட்டத்தை தொடர் போராட்டமாக மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாக, தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்