பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய எட்டாம் கண்டம் கண்டுபிடிப்பு
பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய எட்டாம் கண்டம் GNS விஞ்ஞானிகள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக கடலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பூமியின் 8 ஆம் கண்டதை இவர்கள் இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.
தெற்கு பசிபிக் கடலின் கீழ் சுமார் 3,500 அடி நீருக்கு அடியில் இந்த கண்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி இது வரை ஒரு சிறிய தீவாக நீருக்கு மேல் காட்சியளித்தது. இது அட்லாண்டிஸ் இல்லை ஸிலாந்தியா (Zealandia)என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நீருக்கடியில் மூழ்கி, பூமி இழந்த ஒரு மிக பெரிய கண்டமாக இந்த எட்டாவது கண்டம் கருதப்படுகிறது. இந்த எட்டாம் கண்டத்தின் நிலப்பரப்பிற்கு ஸிலாந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள ஜி.என்.எஸ் சயின்ஸின் ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டத்தின் வடிவத்தையும் அளவையும் மிக விரிவாக வரைபடமாக்கியுள்ளனர். ஸிலாந்தியாவின் மொத்த பரப்பளவு கிட்டத்தட்ட 2 மில்லியன் சதுர மைல்கள். அதாவது சரியாகச் சொன்னால் 5 மில்லியன் சதுர கிலோமீட்டராகும்.
இந்த ஒட்டுமொத்த பரப்பளவையும் இந்த விஞ்ஞானி குழு ஆராய்ச்சி செய்து அதன் தோற்றத்தை வரைபடமாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையில் ஸிலாந்தியா கண்டம் ஆஸ்திரேலியாவின் பாதி அளவு கொண்டது என்றும் இந்த கண்டத்தின் 6% மட்டுமே கடல் மட்டத்திற்கு மேல் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஸிலாந்தியா நீருக்கடியில் புதைக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் கடல் தளத்திற்கும் வரைபடமாக்க வேண்டியிருந்தது. எனவே தான் விஞ்ஞானிகள் குழு ஒரு பாத்திமெட்ரிக் அளவீடு முறைப் படி மிகத் துல்லியமாக வரைபடத்தை உருவாக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் தயாரித்த மற்றொரு வரைபடம் நீருக்கடியில் கண்டத்தில் உள்ள மேலோடு வகைகளைக் காட்டுகிறது. இந்த வரைபடம் கண்டத்தின் வயது மற்றும் அதன் நிலப்பரப்பு தகவலைக் குறிக்கிறது.
2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த 8 ஆம் கண்டத்தின் முழு ஆராய்ச்சியையும் இந்த குழு முடித்துவிட திட்டமிட்டுள்ளது.