போலி ஆவணங்களை பயன்படுத்தி உலர்ந்த பாக்குகளை மீள்ஏற்றுமதி செய்த நபர் ஒருவர் கைது..!

போலி ஆவணங்களை பயன்படுத்தி உலர்ந்த பாக்குகளை மீள்ஏற்றுமதி செய்த நபர் ஒருவர் கைது..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த பாக்குகள் அடங்கிய கொள்கலன்கள் உரிய முறைமையை விடுத்து போலி ஆவணங்களை பயன்படுத்தி அவற்றை இந்தியாவுக்கு மீள்ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகம் தொடர்பான தகவல் குற்றப்புலனாய்வு பிரிவினால் கண்டறியப்பட்டுள்ளது.

அவிஸ்ஸாவலை பகுதியை சேர்ந்த 39 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இது தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.

சந்தேகநபர் உரிய நடைமுறையை மீறி வரி செலுத்தாமல் 23 கொள்களன்கள் மீள் ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு இதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் கணக்கிடப்படுகின்றது.

அத்துடன் சந்தேகநபரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்