பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகளை இன்று முதல் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸாம்மில் விடுத்துள்ள வர்த்தமானியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர சபையின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் விசேட ஆணையாளராக, நிர்வாக சேவை உத்தியேகத்தரான ஜீவன்த்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இன்று முதல் 3 மாதகாலப்பகுதிக்குள் பதுளை மாநகர சபையின் தலைவர் மற்றும் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எம்.ஆர் அநுரகுமாரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது