
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 71,000 ஐ கடந்தது..!
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 71,000 கடந்துள்ளது.
நேற்றைய தினம் 976 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகினதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொவிட் நோயாளர்கள் நேற்றைய தினமே பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 71,211 ஆக உயர்வடைந்துள்ளது.
பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 971 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 4 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 67,200 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், குவைட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று கொவிட் நோயாளராக கண்டறியப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 5,788 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினம் மாத்திரம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 912 பேர் குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65,053 ஆக அதிகரித்துள்ளது.