சட்டவிரோதமான வெளிநாட்டுப் பயணத்தை தடுப்பதற்கான நடவடிக்கை

சட்டவிரோதமான வெளிநாட்டுப் பயணத்தை தடுப்பதற்கான நடவடிக்கை

சட்டவிரோதமான வெளிநாட்டுப் பயணத்தினை தவிர்ப்பதற்கான விழிப்பூட்டல்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு காணிப் பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று (09) இடம்பெற்றது.

மாவட்ட செயலக விளையாட்டு அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு அனுசரணை வழங்கியுள்ளது.

விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் பயிற்றுவிப்பாளர்களுக்கான செயலமர்வினூடாக பிரதேசத்திலுள்ள புலம்பெயரும் இளைஞர் யுவதிகளுக்கு விழிப்பூட்டலை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செயலமர்வில் சட்டவிரோதமான மற்றும் முறையற்ற வெளிநாட்டுப் பயணத்தினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விபரீதங்கள் தெழிவுபடுத்தப்பட்டு, முறையான வெளிநாட்டுப் பயணங்களுக்கான வழிமுறைகள் எடுத்துக்காட்டப்பட்டன. இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.