அத்தியவசியப் பொருட்களின் விலைக் குறைப்பு என்பது சாத்தியமே இல்லை! நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் குற்றச்சாட்டு

அத்தியவசியப் பொருட்களின் விலைக் குறைப்பு என்பது சாத்தியமே இல்லை! நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் குற்றச்சாட்டு

கடந்த 8 ஆம் திகதி முதல் 27 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் எனவும் இந்த கட்டுப்பாட்டு விலை எதிர்வரும் 3 மாத காலத்துக்கு மாற்றம் செய்யப்படாது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்த போதிலும், நடைமுறையில் அந்த விடயம் சாத்தியமாகியில்லை என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத் தலைவர் ரஞ்சித் வித்தானகே குற்றம் சாடியுள்ளார்.

கொழும்பிலுள்ள என்.எம்.பெரேரா கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

'2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று வெளியான வர்த்தமானி அறிக்கையில் பொதி செய்யப்படாத ஒரு கிலோ கிராம் சீனியின் அதிகூடிய சில்லறை விலை 85 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் அதிகூடிய சில்லறை விலை 90 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுமார் 3 மாத காலத்துக்கு முன்னதாக வெளியான வர்த்தமானியில் கட்டுப்பாட்டு விலையை நடைமுறைப்படுத்த தவறிய அமைச்சர் பந்துல குணவர்தன, தற்போது புதிதாக 27 அத்தியசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி முதல் இதுவரை காலவரையில் பொதுமக்கள் அதிகளவான விலைக்கே அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தும் வருகின்றனர்.

குறித்த வர்த்தமானியில் பொதி செய்யப்படாத ஒரு கிலோ கிராம் சீனி 85 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்து. எனினும் பொதுமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை.

2020 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதியன்று வெளியான வர்த்தமானியில், பொதி செய்யப்படாத ஒரு கிலோ கிராம் சீனி 99 ரூபாவுக்கு விற்பனையாகியிருந்து.

இதன்படி கிலோ ஒன்றுக்கான சீனியை கொள்வனவு செய்ய நுகர்வோர் 14 ரூபாவை மேலதிகமாக செலவிட்டுள்ளனர். இது மிகப்பெரிய மோசடியாகும். கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை இனங்கண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும்' என்றார்.

இதேவேளை, தனது உயிருக்கு ஆபத்து இருப்பாதாகவும், அது தொடர்பில் பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இயக்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் விளக்கமளிக்கையில், ' எனது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டு, தேசிய புலனாய்வுப் பிரிவில் சேவை செய்யும் நபர் என மூலம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நபரொருவர் குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொள்வதற்காக அவரை அனுமதிக்குமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட குறித்த உரையாடல் தொடர்பான குரல் பதிவை ஊடகங்களுக்கு வெளியிட்டார். இது தொடர்பில் பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும்.

உண்மையிலேயே எனக்கு தொலைபேசிய அழைப்பை மேற்கொண்ட அந்த நபர் தேசிய புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்தவர் என்றால் பிரச்சினை இல்லை.

மாறாக அந்த நபர் தேசிய புலனாய்வுப் பிரிவினைச் சேராதவராக இருந்தால் அது மிகவும் அச்சுறுத்தாலான விடயமாகும். அவ்வாறானால், இந்த தொலைப்பேசி அழைப்பானது எனது உயிருக்கும் அச்சுறுத்தலானதாகவே நான் பார்க்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.