நச்சுத்தன்மையுடனான உணவை அதிகம் நுகரும் நாடாக இலங்கை..!

நச்சுத்தன்மையுடனான உணவை அதிகம் நுகரும் நாடாக இலங்கை..!

உலகில் நச்சுத்தன்மையுடனான உணவை அதிகளவில் நுகரும் நுகர்வோர் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில அந்த சங்கத்தின் தலைவர், விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய இதனைத் தெரிவித்துள்ளார்.

தரவுகளின் அடிப்படையில், நாடொன்றில் தனிமனித உணவு உற்பத்திக்கான விஷ பயன்பாடு சாதாரணமாக 8 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது.

ஆனால், இலங்கையில் இந்த அளவானது 280 புள்ளிகளாக உள்ளது.

இந்த நிலையில், சுற்றுச்சூழலில் நச்சுத்தன்மை சேர்வதை தவிர்க்க வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய கோரியுள்ளார்