சகல வகுப்புக்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு..!
நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் சகல வகுப்புக்களுக்குமான கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மாரச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெறவுள்ளது.
இதனை தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் சுகாதார தரப்பினரின் அனுமதியின் கீழ் பாடசாலைகளை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்