நேற்று மாயமான ஏழு வயது மாணவன் சடலமாக மீட்பு

நேற்று மாயமான ஏழு வயது மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா நவ்வி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வரும் 07 வயதுடைய ப. அபிசாந் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் நேற்றையதினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சக மாணவனின் வீட்டிற்குச் சென்று படித்து விட்டு வருவதாக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரை காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு அழிக்கப்பட்டிருந்தது.

ஒமந்தை பொலிஸார் மோப்ப நாய் சகிதம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுவன் அவ் வீட்டில் காணப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.