காதலர் தினத்தில் விதிக்கப்பட்டது தடை
எதிர்வரும் 14 ம் திகதி காதலர் தினத்தில் நடத்தப்படவுள்ள களியாட்ட நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்களின் ஊடாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சுகாதார பிரிவின் அனுமதியின்றி, சட்டவிரோதமாக அவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் பட்சத்தில், நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிகழ்வுக்கு வருகைத் தந்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என அவர் இளைஞர், யுவதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.