பாடசாலை மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது..!

பாடசாலை மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது..!

பாடசாலை மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் காலி - ஹிரிபுர பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் புகையிலை அடங்கிய 19 பொதிகளை கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலி நகரின் பாடசாலையொன்றில் 14 வயது மாணவனிடமிருந்து 4 கிராம் புகையிலை கைப்பற்றப்பட்டதன் பின்னரே இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்