வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 458 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்...!
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 458 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தினுாடாக நாட்டை வந்தடைந்தனர்.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 7 விமான சேவைகளை மேற்கொண்டு இவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தொிவித்தார்.
இவர்களில் 290 பேர் ஜோர்தானிலிருந்தும் 66 பேர் கட்டாரிலிருந்தும் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, மேலும் 112 பேர் இரு விமான சேவைகள் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்