நாட்டில் மேலும் ஒன்பது கொவிட்-19 மரணங்கள் பதிவு...!

நாட்டில் மேலும் ஒன்பது கொவிட்-19 மரணங்கள் பதிவு...!

நாட்டில் மேலும் ஒன்பது கொவிட்-19 மரணங்கள் நேற்று பதிவாகின.

இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்-19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 365 ஆக உயர்வடைந்துள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தனவின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு-15 பகுதியை சேர்ந்த 95 வயதான ஆண் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

கொவிட்-19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவருக்கு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

கொவிட்-19 நிமோனியா, குருதி விசமானமையினால் ஏற்பட்ட அதிர்ச்சி, இதயம் செயலிழந்தமை என்பன அவரது மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பகுதியை சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவருக்கு குருநாகல் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

கொவிட்-19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவருக்கு வெலிசறை மார்பு சிகிச்சை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

சுவாச தொகுதி செயலிழந்தமை மற்றும், கொவிட்19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட்19 நிமோனியா, புற்று நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும்.

ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட்19 நிமோனியா மற்றும் பக்கவாதம் என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும்.

ஹொரனை பகுதியை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொழும்பு மகரகம அபேக்‌ஷா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

குருதி விசமானமை, கொவிட்-19 நிமோனியா மற்றும் நுரையீரல் புற்றுநோய் என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும்.

குருதெனிய பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவருக்கு கண்டி பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 1ம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்-19 நிமோனியா மற்றும் குருதி விசமானமை என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என குறிப்பிடப்படுகிறது.

மாவனெல்லை பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவருக்கு மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

கொவிட்-19 நிமோனியா மற்றும் இதயநோய் நிலை என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொவிட்-19 நோயால் முதல் முறையாக காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொனராகலை காவல்துறைக்கு இணையாக சேவையாற்றிய 59 வயதான உப காவல்துறை பரிசோதகர் ஒருவரே கொவிட் நோயால் மரணித்ததாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த காவல்துறை அதிகாரி ஓய்வுக்கு முன்னரான விடுமுறையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.