
பிரேஸிலில் வெடி விபத்து! நால்வர் பலி
பிரேஸிலின் வடகிழக்கில் அமைந்துள்ள ரியோ கிராண்டே டோ நோர்டே மாநிலத்தின் தலைநகரமான நடாலில் இடம்பெற்ற வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடாலின் கிழக்குப் பகுதியில் உள்ள மே லூயிசா பகுதியில் அந்நாட்டு நேரப்படி 03:00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 49 வயதான பெண், அவரது 18 வயதான மகள், மேலும் 57 வயதுடைய இரண்டு பெண்கள் அடங்குவர்.
மேலும் இருவர் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வெடி விபத்து தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெடி விபத்தில் ஏழு வீடுகள் இடிந்து விழுந்ததாக அந்நாட்டு இராணுவ பொலிஸ் தெரிவித்துள்ளது