1,000 ரூபா வேதன உயர்விற்கு அனுமதி கிடைத்ததமைக்கு இ.தொ.கா நன்றி தெரிவிப்பு..!

1,000 ரூபா வேதன உயர்விற்கு அனுமதி கிடைத்ததமைக்கு இ.தொ.கா நன்றி தெரிவிப்பு..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் வேதன உயர்வை வழங்குவதற்கு வேதன நிர்ணய சபை அனுமதியளித்தமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பிரதமரின் மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் விஜேராமவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரை சந்தித்தனர்.

இதன்போது அவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.