
கடைக்கு செல்வதாக தெரிவித்து சென்ற குடும்பஸ்தரை காணவில்லை -பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
வவுனியா, செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் வசித்து வரும் 2 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என அவரின் மனைவி செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.
இராமையா நல்லநாதன் என்பவரே காணாமற்போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கடைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். 2 நாட்கள் கடந்தும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரின் மனைவி செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.
இவரை யாராவது கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழேயுள்ள இலக்கத்திற்கோ அழைப்பினை (தொலைபேசி இலக்கம்- 0766975067) ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.