மியன்மாரின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியமைக்கு எதிராக போராட்டம்..!

மியன்மாரின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியமைக்கு எதிராக போராட்டம்..!

மியன்மாரின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று இரண்டாவது நாளாகவும் பெருமளவான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மியான்மாரின் முக்கிய நகரமான யங்கூனில்  ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளை கடந்த முதலாம் திகதி அந்த நாட்டு இராணுவம் தடுத்து வைத்து ஆட்சியை கைப்பற்றியது.

இதற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதேநேரம், நேற்றைய தினம் இணையதள சேவைகளையும் முடக்குவதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது