பிரான்ஸ் அதிபரின் நெகிழ்ச்சியான செயல் - வைரலாகும் காணொளி

பிரான்ஸ் அதிபரின் நெகிழ்ச்சியான செயல் - வைரலாகும் காணொளி

சுலோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக்கிற்கு பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் குடை பிடித்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தெரிய வருகையில்,

பிரான்சுக்கு வருகை தந்த சுலோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக் , பெப்ரவரி 3ஆம் திகதி அதிபர் மக்ரோனை சந்திக்க எலிசி அரண்மனைக்கு வந்தார்.

இகோர் மாடோவிக்கை மக்ரோன் வரவேற்றதை அடுத்து இருவரும் அரண்மனைக்கு வெளியே செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர்.

இருவரும் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது மழை பெய்யத்தொடங்கியது.

உடனே பெண் உதவியாளர் ஒருவர் வந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு ஒரு கறுப்புக் குடையை வழங்கினார். மக்ரோன் அதை சுலோவாக்கிய பிரதமருக்கு பிடித்தார்.

பெண் உதவியாளர் மக்ரோன் பிடித்திருந்த குடையை வாங்க முன்வந்தார், ஆனால் அவசியமும் இல்லை என்று அவரிடம் மக்ரோன் சைகை காட்டினார்.

இரண்டு பேரும் செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு, எலிசி அரண்மனைக்குள் செல்ல திரும்பியபோது, ​​ஒரு இராணுவ உதவியாளர் அணுகி, மக்ரோனிடம் குடையை வாங்க முன்வந்தார்.

மக்ரோன் அவரிடமும் குடையை வழங்காமல் தொடர்ந்து இகோர் மாடோவிக்கு தானே குடை பிடித்தார்.

இவ்வாறு மக்ரோன் சுலோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது