தலதா மாளிகைக்கு முன்பாக பதற்ற நிலை - இதுவா காரணம்...? (காணொளி)

தலதா மாளிகைக்கு முன்பாக பதற்ற நிலை - இதுவா காரணம்...? (காணொளி)

 

சுதந்திர தினமான இன்று தலதா மாளிகைக்கு முன்பாக  சிங்கள தேசிய கொடியென தெரிவித்து தேரரொருவர் கொடியொன்றினை ஏற்றுவதற்கு முயற்சித்த வேளையில் அங்கு பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

ரம்புக்கன கலதெனிகட புராதன ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்.மெதிரிகிரியே சுகீ எனும் தேரர் ஒருவரே இவ்வாறு கொடியை ஏற்ற முற்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அதற்கெதிராக பெற்றுக்கொண்ட நீதிமன்ற உத்தரவினை குறித்த தேரரிடம் பெற்றுக்கொடுத்ததைத் தொடர்ந்து அக்கொடியை தலதா புத்த வந்தனைக்கு சமர்ப்பிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது