களு கங்கை மணல் அகழ்விற்கு அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானம்...!

களு கங்கை மணல் அகழ்விற்கு அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானம்...!

களு கங்கை மணல் அகழ்விற்கு குறுகிய கால நிபந்தனைகளுக்குட்பட்ட அனுமதிப்பத்திரங்களை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடல் நீர் ஆற்று நீருடன் கலப்பது நிரூபிக்கப்பட்டால் மணல் அகழ்வை மீண்டும் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சரவை தொிவித்துள்ளது.