
உந்துருளி விபத்தில் பெண்ணொருவர் பலி...!
நேற்று (03) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அங்குனகொலபெலஸ்ஸ, கைலவெல்போடா பகுதியில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பெண், குட்டிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வேளையில் உயிாிழந்துள்ளார்.
48 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவரே இவ்வாறு உயிாிழந்தவராவார்.
மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு உந்துருளி செலுத்துநர் எம்பிலிபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அங்குனகொலபெலஸ்ஸ காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.