அம்பாறையில் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணிற்கு நீதிமன்றம் அபராதம் விதிப்பு
அம்பாறை நகர் பகுதியில் பாலியல் விடுதி நடாத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு அம்பாறை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
குறித்த உத்தரவை அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவானும் மாவட்ட நீதவானுமாகிய ஏ.ஜ.கெட்டிவத்த நேற்று பிறப்பித்துள்ளார்.
அம்பாறை வைத்தியசாலை வீதி புத்தங்கல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று நீண்ட காலமாக பாலியல் விடுதியாக நடாத்தப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட முறைபாட்டுக்கமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய போதை பொருள் தடுப்பு மற்றும் இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது விடுதியில் இருந்த பெண் ஒருவரையும், விடுதியை முகாமைத்துவம் செய்து நடாத்தி வந்த பெண் உட்பட இருவரையும் கைது செய்து அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் மாவட்ட நீதவான் ஏ.ஜ.கெட்டிவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தியுள்ளனர்.
இதன் போது விடுதி முகாமையாளரான பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு நீதி சட்டத்தில் இருக்கும் அதிகூடிய தண்டப்பணமாக இரண்டு இலட்சம் ரூபாயும் மற்றொரு பெண்ணுக்கு 100 ரூபாயும் அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.