வடகொரியா சியோலை கைப்பற்றிய நாள்: ஜூன் 28- 1950

வடகொரியா சியோலை கைப்பற்றிய நாள்: ஜூன் 28- 1950

வடகொரியா 1950-ம் ஆண்டு ஜுன் 28-ந்தேதி சியோலை கைப்பற்றியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்- * 1519 - ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் மன்னனானான். * 1651 - 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது. * 1763 - ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. * 1776 - ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த "தொமஸ் ஹின்க்கி"

வடகொரியா 1950-ம் ஆண்டு ஜுன் 28-ந்தேதி சியோலை கைப்பற்றியது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்-

 


* 1519 - ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின் மன்னனானான். * 1651 - 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது. * 1763 - ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. * 1776 - ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த "தொமஸ் ஹின்க்கி" தூக்கிலிடப்பட்டான். * 1880 - அவுஸ்திரேலியாவின் காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலி பிடிபட்டான். * 1881 - ஆஸ்திரியாவும் சேர்பியாவும் இரகாசிய உடன்பாட்டை எட்டின.

* 1904 - "நோர்ஜ்" என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறி திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர். * 1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது. * 1919 - முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. * 1922 - ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. * 1940 - சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது. * 1950 - வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.

* 1964 - மால்க்கம் எக்ஸ் ஆபிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார். * 1967 - கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. * 1994 - ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.

* 1995 - மண்டைதீவுத் தாக்குதல், 1995: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். * 2004 - ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது