இருபதுக்கு 20 தொடருக்கான பாகிஸ்தான் அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு..!

இருபதுக்கு 20 தொடருக்கான பாகிஸ்தான் அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு..!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று கிரிக்கட் போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

20 பேர் கொண்ட இந்த குழாமிற்கு பாபர் அசாம் தலைமை தாங்குகின்றார்.

இதற்கமைய, இந்த குழாமில் பாபர் அசாம், ஆமிர்யாமின், அமாட் புட், அசிப் அலி, டனிஸ் அஸிஸ், பாஹிம் அஸ்ரப், அய்டர் அலி, ஹரிஸ் ரவுப், ஹசன் அலி, ஹூசைன் டெலட், இப்திஹார் அஹமட், குஸ்தில் சாஹா, மொஹமட் நவாஸ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் ரிஸ்வான், சர்பராஸ் அஹமட், சஹின் அப்ரிடி, உஸ்மான் காதீர், சப்பார் கோர். சாஹித் மெக்மூட் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.