நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!!

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!!

ஜனவரி மாத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1224 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் அதிகமானோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டத்தில் 759 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், கொழும்பு மாவட்டத்தில் 87 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் 47 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுகின்றது