இரவு இடம்பெற்ற கோர விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு

இரவு இடம்பெற்ற கோர விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு

புத்தளம் பாலாவி சிமெந்து தொழிற்சாலையிலிருந்து சிமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனத்துடன் பாலாவி பகுதியிலிருந்து கல்லடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் ம ற்றுமொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மானவெரி சிறாம்பையடி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரும் அட்டவில்லு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடை ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேகொண்டு வருகின்றனர்.