நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் புதிய வரைபில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் புதிய வரைபில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

அமெரிக்காவில் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் கூடிய வரைபு ஒன்றில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அங்கு கருப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்ட் என்பவர் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொல்லப்பட்ட நிலையில் வெடித்த கலவரங்களில் நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகள் உடைக்கப்பட்டமையை அடுத்தே இந்த வரைபு அமுலுக்கு வருகிறது.

அந்தவகையில், இவ்வாறு அடையாளச் சின்னங்களை சேதப்படுத்துபவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் அடங்கியதாக குறித்த வரைபில் கையெழுத்திட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தனது ருவிற்றம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடையாளச் சின்னங்களை சேதப்படுத்துபவர்களுக்கு அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை உள்ளிட்ட சட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ளதாகவும், ஆனால் புதிய வரைபில் பல்வேறு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.