நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு...!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு...!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கொழும்பு முதல் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

அத்துடன் குறித்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.