மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

ஜனவரி 17 முதல் 22 வரையான ஆறு நாட்களுக்குள் பதிவான 427 வீதி விபத்துக்களில் மொத்தம் 30 பேர் உயிரிழந்ததுடன், 90 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் 189 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

வீதி போக்குவரத்து விபத்துக்களில் பலியானவர்களில் பெரும்பாலோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர்.

மோட்டார் சைக்கிள்களில் செல்லும் போது கூடுதல் கவனம் செலுத்துமாறு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.